ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 14 பிப்ரவரி 2022 (07:31 IST)

விண்ணில் சீறிப்பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-52 ராக்கெட்: விஞ்ஞானிகளுக்கு பாராட்டு

விண்ணில் சீறிப்பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-52 ராக்கெட்: விஞ்ஞானிகளுக்கு பாராட்டு
பிஎஸ்எல்வி சி 52 ராக்கெட் இன்று விண்ணில் சீறிப்பாய்ந்ததை அடுத்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட தாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
 
பிஎஸ்எல்வி சி 52 ராக்கெட் புவி கண்காணிக்க கண்காணிப்புக்கான செயற்கைக்கோளுடன் சீறிப்பாய்ந்தது என விஞ்ஞானிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர் 
 
பிஎஸ்எல்வி சி 52 ராக்கெட்டில் ஐ.ஒ.எஸ்.04 செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்ட தாகவும் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து செலுத்தப்பட்ட இந்த ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்
 
புவி கண்காணிப்பு இராணுவ பாதுகாப்பு ஆகியவற்றுக்காக இந்த செயற்கைக்கோள் பயன்பட உள்ளது என்றும் அது மட்டுமன்றி விவசாயம், பேரிடர் மேலாண்மை, காடுகள் பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளுக்கு இந்த செயற்கைக்கோள் உதவும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.