புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 11 பிப்ரவரி 2022 (08:56 IST)

ஏலியன்கள் என்பது வெறும் கற்பனையே: விஞ்ஞானிகளின் ஆய்வு முடிவு!

ஏலியன்கள் என்பது வெறும் கற்பனையே: விஞ்ஞானிகளின் ஆய்வு முடிவு!
ஏலியன்கள் என்பது வெறும் கற்பனையே என்றும் ஏலியன்கள் எனப்படும் வேற்றுக் கிரகவாசிகள் இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும் நீண்ட ஆய்வுக்குப்பின் ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
 
 ஏலியன்கள் இருப்பதாகவும் அவ்வப்போது பூமிக்கு வந்து செல்வதாக கூறப்பட்ட நிலையில் கலிபோர்னியாவில் உள்ள ஆய்வாளர்கள் மேற்கு ஆஸ்திரேலிய பாலைவனத்தில் உள்ள ஆய்வு மையத்தில் இதுகுறித்து மாதக்கணக்கில் ஆய்வு செய்தனர் 
 
இந்த ஆய்வின் முடிவில் நட்சத்திரங்கள் மற்றும் ஏனைய கோள்களில் இருந்து எந்த அதிர்வு என்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் எனவே மிகவும் சக்தி வாய்ந்த ரேடியோ தொலைநோக்கி மூலம் வான்வெளியை ஆராய்ச்சி செய்ததில் ஏலியன்கள் எனப்படும் வேற்று கிரகவாசிகள் இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்
 
இதனை அடுத்து ஏலியன்கள் என்பது வெறும் கற்பனையே என்பது தற்போது தெரியவந்துள்ளது.