செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 30 ஜூலை 2019 (20:26 IST)

ஐஐடி வளாகத்தில் மாடுகள் உலவுவதை தடுக்க பாதுகாவலர்கள் !

இந்தியாவில் தலைசிறந்த கல்வி நிறுவனமாக கருதப்படுவது ஐஐடி தொழில்நுட்பக் கல்லூரிகள் தான். சில  வாரங்களுக்கு முன்னர் மும்பை ஐஐடியில் வளாகத்தில் நுழைந்த மாடுகள், பயிற்சிக்கு வந்த ஒரு மாணவனை முட்டித்தள்ளியது.  இந்த சம்பவம் நாடு் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை மீண்டும் வளாகத்தில் நுழைந்த மாடு ஒன்று நுழைந்து மாணவர்களுக்கு இடையூறு செய்ததாகத் தெரிகிறது.
 
இதுகுறித்து மாணவர்களும் தொடர்ந்து சமூக வலைதளங்களில் இதுகுறித்து பதிவிட்டு வருகின்றனர்.
 
இந்நிலையில் மாணவர்களையும், ஆசிரியர்களை காப்பாற்றும் பொருட்டு 3 பாதுகாவலர்களை வளாகத்தில் பாதுகாப்பு பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். இப்போது நியமிக்கப்பட்டுள்ள பாதுகாவலர்களால் மாடுகளுக்கு எந்த பிரச்சனையும் நேரக்கூடாடு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.