வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 30 ஜூலை 2019 (13:13 IST)

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் கால்நடைகள்.. அதிர்ச்சியூட்டும் வீடியோ

மஹாராஷ்டிராவில் கால்நடைகளை வெள்ளம் அடித்து செல்லும் வீடியோ ஒன்று தற்போது செய்தி ஊடகங்களில் பரவி வருகிறது.

மஹாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருவதால், பல மாவட்டங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இந்த கனமழையால் பல அணைகளில் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

மேலும் பல ஆறுகளிலும் நதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் நதிக்கரையோரம் வாழும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் மஹாராஷ்டிர மாநிலம் ,சந்திரபூர் மாவட்டத்தில் வெள்ளத்தில் கால்நடைகள் அடித்துச்செல்லப்படும் அதிர்ச்சிகரமான வீடியோ ஒன்று தற்போது செய்தி ஊடகங்களில் பரவி வருகிறது. வெள்ளத்தில் பல கால்நடைகள் அடித்துச்செல்வதை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவேற்றியுள்ளார் என தெரியவருகிறது.