1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Priyanka Reddy father says on encounter

”எனது மகளின் ஆத்மா சாந்தியடையும்” பெண் மருத்துவரின் தந்தை நெகிழ்ச்சி

பிரியங்கா ரெட்டி
தெலுங்கானா பெண் மருத்துவரை வன்கொடுமை செய்து கொலை செய்த 4 குற்றவாளிகளை போலீஸார் என்கவுண்டரில் சுட்டுக் கொன்ற நிலையில் மருத்துவரின் தந்தை ”எனது மகளின் ஆத்மா சாந்தியடையட்டும்” என கூறியுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவர் ஒருவர் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திய நிலையில் பெண் மருத்துவரை கொலை செய்த 4 பேரை போலீஸார் இன்று காலை சுட்டுக்கொன்றுள்ளது.

அதாவது 4 பேரையும் அழைத்து சென்று விசாரணை நடத்த முயன்றபோது தப்பி ஓட முயன்றதாகவும், ஆதலால் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள் எனவும் போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து குற்றவாளிகள் 4 பேரை போலீஸ் சுட்டுக்கொன்றதை சமூக வலைத்தளங்களில் பலர் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்து வரும் நிலையில் தற்போது அப்பெண்ணின் தந்தை “எனது மகளின் ஆத்மா சாந்தியடையட்டும்” என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரையில்
”கட்டாய ஓய்வு தகவல் உண்மையில்லை”.. தமிழக அரசு விளக்கம்