வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: வெள்ளி, 6 டிசம்பர் 2019 (09:03 IST)

”கட்டாய ஓய்வு தகவல் உண்மையில்லை”.. தமிழக அரசு விளக்கம்

தமிழக அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்படும் என்று பரவிய தகவல் உண்மையில்லை என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

தமிழக அரசு ஊழியர்களில் 50 வயது நிறைவு பெற்றவர்களின் விவரங்களையும் 30 ஆண்டுகள் பணியாற்றியவர்களின் விவரங்கள் குறித்தும் வேலை வாய்ப்பு இயக்குநரகம் சார்பில் கேட்கப்பட்டது. இதனை கொண்டு 50 வயது நிறைவு பெற்றவர்களுக்கும் 30 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கும் கட்டாய ஓய்வு அளிக்கவே இவ்வாறு தகவல் கேட்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் இது குறித்து விளக்கம் அளித்துள்ள தமிழக அரசு, அரசு ஊழியர்களின் சுகாதாரம் குறித்த புள்ளி விவரங்களுக்காகவே இந்த தகவல் கேட்கப்பட்டதாக கூறியுள்ளது. மேலும் கட்டாய ஓய்வுக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும், அரசு ஊழியர்கள் ஓய்வு குறித்து ஆணையிட வேலை வாய்ப்பு துறைக்கு அதிகாரம் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.