செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: வியாழன், 5 டிசம்பர் 2019 (18:37 IST)

”நாடாளுமன்ற எம்.பி.களுக்கு வந்த சோதனையை பாருங்க..!!”

நாடாளுமன்ற கேண்டீனில் இனி எம்.பி.க்களுக்கு மலிவு விலையில் உணவு கிடையாது என தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்றத்தில் உள்ள கேண்டீனில் எம்.பி.க்கள் சலுகை விலையில் உணவு பெற்று வந்தனர். இது குறித்து பல சர்ச்சைகள் கிளம்பிய நிலையில் கடந்த ஆண்டு, கேண்டீனில் உணவு பொருட்களின் விலை ஓரளவுக்கு உயர்ந்தது.

இந்நிலையில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவுறுத்தியதை தொடர்ந்து சலுகை விலையில் எம்.பி.க்களுக்கு உணவு கிடையாது என கூறப்பட்டுள்ளது.

மேலும் கேண்டீனுக்கு ஒதுக்கப்பட்டு வந்த மானியத்தை ரத்து செய்ய எம்.பி.க்கள் ஒத்துழைப்பு அளித்ததாகவும் கூறப்படுகிறது. இதன் மூலம் ஆண்டு தோறும் ரூ.17 கோடி சேமிக்கப்படும் என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.