1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 6 டிசம்பர் 2019 (15:29 IST)

அதிகாலை நடந்த ஆபரேசன்: எப்படி நடந்தது என்கவுண்டர்?

ஐதராபாத்தில் பெண் கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி சமீபத்தில் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவத்தில் கைதான நால்வரும் இன்று அதிகாலை போலீஸாரால் என்கவுண்டர் செய்யப்பட்டனர். இது குறித்த கூடுதல் விவரங்கள் தற்போது வெளிவந்துள்ளது 
 
பொதுவாக ஒரு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டால் உடனடியாக போலீசார் அந்தக் குற்றம் எப்படி நடந்தது என்பதை கைது செய்யப்பட்டவர்களிடம் நடித்துக் காட்ட சொல்வது வழக்கம் 
 
ஆனால் இந்த வழக்கில் குற்றத்தை நடித்துக் காட்ட ஒரு வாரம் வரை போலீசார் காத்திருப்பதாக தெரிகிறது. மேலும் நேற்று இரவு நால்வரிடமும் போலீசார் கடுமையான விசாரணையை மேற்கொண்டதாகவும், இரவு முழுக்க தூங்காமல் இருந்த நால்வரையும் இன்று அதிகாலை குற்றம் நடந்த இடத்திற்கு அழைத்துச் சென்று நடித்து காட்ட சொன்னதாகவும் தெரிகிறது 
 
இதனையடுத்து அவர்கள் நால்வரும் நடித்துக் கொண்டிருந்தபோது திடீரென இருவர் புதருக்குள்ளும், இன்னும் இருவர் தேசிய நெடுஞ்சாலையிலும் பிரிந்து சென்று தப்பிக்க முயற்சி செய்ததாகவும் இதனை அடுத்து நால்வரையும் போலீசார் சுற்றிவளைத்து என்கவுண்டர் செய்ததாகவும் கூறப்படுகிறது
 
இந்த சம்பவத்தில் போலீசார் ஒருவருக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சுட்டுக்கொல்லப்பட்ட நால்வரின் நெற்றியிலும் வயிற்றிலும் குண்டுகள் பாய்ந்து உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. போலீசார் நடத்திய இந்த என்கவுண்டர் ஆபரேஷன் குறித்து தெலுங்கானா மாநில காவல்துறையினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது