1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 21 டிசம்பர் 2021 (19:02 IST)

என் குழந்தைகளின் இன்ஸ்டாகிராம் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளன: பிரியங்கா காந்தி

எனது குழந்தைகளின் இன்ஸ்டாகிராம் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டு இருப்பதாக காங்கிரஸ் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
உத்தரப்பிரதேச மாநிலத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதாக மாநிலத்தின் முதல்வர் வேட்பாளர் என்று கூறப்படும் பிரியங்கா காந்தி தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தனது குழந்தைகளின் இன்ஸ்டாகிராம் கணக்குகள் ஹேக் செய்யப் பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
தன்னையும் தனது குடும்பத்தினரையும் பழிவாங்கும் நோக்கில் தனது குழந்தைகளின் இன்ஸ்டாகிராம் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டு இருப்பதாகவும் அவர்களுக்கு வேறு வேலையே இல்லையா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்
 
பிரியங்கா காந்திக்கு மிரயா வத்ரா மற்றும் ரைகான் வத்ரா ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது