ப.சிதம்பரம் குடும்பத்தினரே அவரது கைதுக்கு வருந்த மாட்டார்கள் - செல்லூர் ராஜூ விமர்சனம்

sellur raju
Last Modified சனி, 24 ஆகஸ்ட் 2019 (15:02 IST)
டெல்லி ஐகோர்ட்டில் முன் ஜாமீன் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து ப.சிதம்பரம் தாக்கல் செய்த வழக்கில்   உச்ச நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இந்நிலையில் சிதம்பரத்துக்கு எதிராக  சிபிஐ தொடர்ந்த வழக்கு,    திங்கட்கிழமை விசாரணைக்கு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ சிதம்பரம் குறித்து விமரித்துள்ளார்.
2007ல் நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் ஐஎன்எக்ஸ் மீடியா அந்நிய முதலீட்டை பெற அனுமதி வழங்கியதாகவும், அதற்கு லஞ்சமாக பணம் பெற்றதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. அதேசமயம் சட்ட விரோத பண பரிவர்த்தனை குறித்த வழக்கை அமலாக்கத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
 
தான் கைது செய்யப்படலாம் என உணர்ந்த ப.சிதம்பரம் முன்னரே முன் ஜாமீன் கேட்டு டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு அளித்தார். அவர் மனு உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. மீண்டும் ஒரு மேல் முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அந்த மனுவின் மீதான விசாரணை தொடங்கப்படும் முன்னே ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டார்.
 
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்நிலையில் ப.சிதம்பரத்தின் மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் அமலாக்கத்துறைக்கு எதிரான ப.சிதம்பரத்தின் முன் ஜாமீனை அங்கீகரித்துள்ளார்கள். இந்த வழக்கு தொடர்பான விசாரணை ஆகஸ்டு 26ம் தேதி நடைபெறும் எனவும் அதுவரை ப.சிதம்பரத்தை கைது செய்யக்கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளனர். 
chidambaram
மேலும் சிபிஐ வழக்கின் விசாரணை எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் இந்த இரு வழக்குகளுமே திங்கட்கிழமை விசாரணைக்கு வர இருக்கிறது.
 
இந்நிலையில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ ப. சிதம்பரம் குறித்து கூறியுள்ளதாவது : ப. சிதம்பரம் குடும்பத்தினரே அவர் கைது செய்யப்பட்டதற்கு வருத்தப்பட மாடார்கள். பிறகு மக்கள் எப்படி வருத்தப்படுவார்கள் ? சிதம்பரம் 10 ஆண்டுகளுக்கு மேலாக மத்திய அமைச்சரவையில் முக்கிய பொறுப்பில் இருந்துக்கூட தமிழகத்திற்கு எந்த திட்டத்தையும் கொண்டுவரவில்லை  என்று  கூறியுள்ளார்.
 


இதில் மேலும் படிக்கவும் :