திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 31 மார்ச் 2020 (09:48 IST)

அரசின் கீழ் கொண்டு வரப்படுகிறது தனியார் மருத்துவமனை: முதல்வரின் அதிரடி நடவடிக்கை

அரசின் கீழ் கொண்டு வரப்படுகிறது தனியார் மருத்துவமனை
இந்தியா முழுவதும் மிக வேகமாகப் கொரோனா வைரஸ் பரவி வருவதை அடுத்து அனைத்து மாநில அரசுகளும் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து கொரோனா வைரஸிடம் இருந்து மக்களை காக்க திட்டமிட்டு வருகின்றனர்
 
இந்த நிலையில் ஆந்திர மாநிலத்தில் இதுவரை 23 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக வாய்ப்பு இருப்பதால் இப்போதே மருத்துவமனைகளை தயார் நிலையில் வைத்திருக்க அம்மாநில முதல்வர் ஜெகநாதன் ரெட்டி திட்டமிட்டுள்ளார் 
 
இந்த நிலையில் அவர் எடுத்துள்ள அதிரடி முடிவின்படி தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவ மனைகள் அனைத்தும் அரசாங்கத்தின் கீழ் செயல்பட உள்ளதாக அவர் கூறியுள்ளார். தேவைப்பட்டால் தனியார் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களையும் அரசு பயன்படுத்திக் கொள்ளும் என்று அவர் அதிரடியாக அறிவித்துள்ளார்
 
அரசு மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்களால் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை சமாளிக்க முடியாது என்பதால் ஆந்திர முதல்வர் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளார். ஆந்திர முதல்வரின் இந்த முடிவுக்கு தனியார் மருத்துவமனை உரிமையாளர்கள் அதிருப்தி அடைந்தாலும் அதை வெளிக்காட்ட முடியாத நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. ஆந்திர முதல்வரை அடுத்து தமிழகம் கேரளா உள்ளிட்ட ஒரு சில மாநில முதல்வர்களும் விரைவில் இதுபோன்ற அதிரடி முடிவு நடவடிக்கையை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்