போட்டோ வெளியிட்ட சின்மயி... பங்கமாய் கலாய்த்த இயக்குநர்

chin
Last Modified வியாழன், 18 ஏப்ரல் 2019 (15:32 IST)
ஓட்டு போட்டுவிட்டு தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றிவிட்டேன் என டிவிட்டரில் பதிவிட்ட சின்மயியை இயக்குனர் அமுதன் கலாய்த்துள்ளார்.
தமிழகம், புதுவை உள்பட 97 மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில் விஐபிக்களும், பொதுமக்களும் ஆர்வத்துடன் வாக்களித்து வருவதால் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 
 
தமிழகத்தை பொறுத்தவரையில் தற்போது 1 மணி நிலவரப்படி 38 மக்களைவை தொகுதிகளில் 39.49 சதவீதமும்  18 சட்டமன்ற இடைத்தேர்தலை பொறுத்தவரை 1 மணி நிலவரப்படி 42.92 சதவீதம் வாக்குப்பதிவாகியுள்ளதாக தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
 
இந்நிலையில் நடிகை சின்மயி தனது டிவிட்டர் பக்கத்தில் தனது ஜனநாயக கடமையை ஆற்றிவிட்டதாக கூறி ஓட்டு போட்ட விரலை டிவிட்டரில் வெளியிட்டார்.  சின்மயியின் கண்ணாடியை பார்த்த இயக்குனர் சி.எஸ்.அமுதன் வின்ட்ஷீல்டை மீண்டும் காரில் எப்படி பொருத்துவீர்கள் என்று  கலாய்த்து ட்வீட் போட்டார். இதற்கு பதிலளிக்கும் விதமாக சின்மயி உங்கள் உதவியுடன் அதை செய்கிறேன் என பதிலளித்தார்.
c1இதில் மேலும் படிக்கவும் :