வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 17 ஜூன் 2020 (10:57 IST)

பிரதமர் மோடி பதுங்குவது ஏன்? – சீனா விவாகாரத்தில் ராகுல் காந்தி கேள்வி!

லடாக் எல்லைப்பகுதியில் என்ன நடந்தது என்பது குறித்து பிரதமர் மோடி மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி கூறியுள்ளார்.

லடாக் பகுதியில் இந்தியா – சீனா ராணுவத்தினர் இடையே ஏற்பட்ட மோதலாம் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்துள்ளனர். 4 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். அதேசமயம் சீனாவிலும் வீரர்கள் உயிரிழந்துள்ளதாக சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சீனாவுடனான இந்த மோதல் குறித்து அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரதமை சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் சீனாவின் இந்த தாக்குதல் குறித்து அரசியல் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள ராகுல்காந்தி ”பிரதமர் மோடி மௌனம் சாதிப்பது ஏன்? பதுங்குவது ஏன்? என்ன நடந்தது என்பது குறித்து அவர் விளக்க வேண்டும். நமது வீரர்களை தாக்க சீனாவுக்கு எவ்வளவு திமிர்? நமது எல்லையை அபகரிக்க அவர்களுக்கு என்ன திமிர்?” என பதிவிட்டுள்ளார்.