ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 2 மே 2024 (15:36 IST)

மெத்தபெட்டமைன் போதைப்பொருளை பதுக்கி வைத்திருந்தவர்கள் கைது: சென்னையில் பரபரப்பு..!

சென்னையில் 8 கிராம் மெத்தபெட்டமைன் போதைப்பொருளை பதுக்கி வைத்திருந்தவர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த காதர் மொய்தீன் என்பவரிடம் இருந்து 8 கிராம் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் காதர் மொய்தீன் அளித்த தகவல் அடிப்படையில் திருவல்லிக்கேணியை சேர்ந்த சுல்தான், அலாவுதீன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.
 
கைதான இருவரிடம் நடத்திய விசாரணையில் திருவான்மியூரை சேர்ந்த ராகுலிடம் போதைப்பொருளை வாங்கியதாக தெரிவித்தனர். இதனையடுத்து திருவான்மியூரில் உள்ள ராகுலின் வீட்டிற்கு சென்ற தனிப்படை போலீசார் நீண்ட போராட்டத்திற்கு பின் அவருடைய வீட்டில் சோதனை செய்ததாக தெரிகிறது.
 
மேலும் இதுகுறித்த விசாரணையில் வாட்ஸ் அப் மூலம் தான் பரிவர்த்தனை நடந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இந்த விவகாரத்தில் இன்னும் சிலர் கைது செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran