வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 8 ஜனவரி 2024 (11:18 IST)

ராமர் கோவில் திறக்கும் நாளில் குழந்தை பிறக்க வேண்டும்! சர்ஜரிக்காக குவியும் விண்ணப்பங்கள்..!

Pregnant
ஜனவரி 22ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட உள்ளதை அடுத்து அதே நாளில் தங்களுக்கு குழந்தை பிறக்க வேண்டும் என ஏராளமான கர்ப்பிணி பெண்கள்  மருத்துவமனைகளில் விண்ணப்பம் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
ராமர் கோவில் திறப்பு தினத்தில் பிரசவமாக வேண்டும் என அறுவை சிகிச்சைக்காக உத்தரப்பிரதேச மருத்துவமனையில் விண்ணப்பங்கள் குவிய தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 
 ஜனவரி இரண்டாவது வாரத்துக்கு பின் பிரசவ தேதியில் உள்ள 35 பெண்கள் ராமர் கோவில் திறப்பு தினத்தன்று குழந்தை பெற ஆர்வம் காட்டியுள்ளதாக கூறப்படுகிறது. 
ராமர் கோவில் திறப்பு நாளில் குழந்தை பிறக்க வேண்டும் என்ற விருப்பம் அதிகரித்து வருவதால்  திட்டமிட்டதை விட அன்றைய தினத்தில் அதிக பிரசவங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
ஆனால் அதே நேரத்தில் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று இந்த முடிவை எடுக்கும்படி சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
 
Edited by Mahendran