திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 11 செப்டம்பர் 2022 (09:36 IST)

பெவிகால் விளம்பர தூதராக நியமிக்க நிதிஷ்குமார் பொருத்தமானவர்: பிரசாந்த் கிஷோர் விமர்சனம்

Prasanth
பெவிகால்  விளம்பர தூதராக நியமனம் செய்ய நிதிஷ்குமார் பொருத்தமானவராக இருப்பார் என பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 தேர்தல் வியூகம் நிபுணர் பிரசாந்த் கிஷோர், பீகார் முதல்வர் நிதிஷ்குமார் குறித்து கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். பீகாரின் அரசியல்  மாநில அளவில் மட்டுமே இருக்கிறது என்று கூறிய பிரசாந்த் கிஷோர் டெல்லிக்கு சென்று ஒரு நிதிஷ்குமார் அரசியல் தலைவர்களை சந்திக்கிறார் என்றால் அதில் என்ன புதுமை இருக்கிறது என்றும் பல கட்சி தலைவர்கள் அவ்வாறு சந்தித்து வருகிறார்கள் என்றும் எதிர்க்கட்சிகள் ஒரு புதிய விஷயத்தை செய்த உள்ளனர் என்பதை நாம் எப்படி நம்புவது என்றும் 2004 நாடாளுமன்றத் தேர்தலில் பெரிய மாற்றம் கொண்டுவரப்படும் என நான் நினைக்கவில்லை என்றும் கூறியுள்ளார் 
 
பெவிகால் நிறுவனம் அவரை விளம்பர தூதராக ஆkகி இருக்க வேண்டும் என்றும் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார். நிதிஷ்குமார் பல கூட்டணிகளை முறித்து கொண்டு வெளியேறினாலும், அவர் முதல்வர் நாற்காலியை மட்டும் பெவிக்கால் போட்டு ஒட்டிக் கொண்டிருப்பதை அடுத்து பிரசாந்த் கிஷோர் இவ்வாறு விமர்சனம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது