1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva

பிரதமராகும் நோக்கம் எதுவும் தனக்கு இல்லை: நிதீஷ் குமார் பேச்சு

nitieshkumar
தனக்கு பிரதமராகும் நோக்கம் எதுவும் இல்லை என பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார். 
 
பாஜகவின் பிரதமர் வேட்பாளர் மோடி என்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் போட்டியிடக்கூடாது என அம்மாநில துணை முதலமைச்சர் தேஜஸ்வி கேள்வி எழுப்பியிருந்தார்
 
இதனையடுத்து நிதிஷ்குமார் தான் எதிர்க்கட்சிகளின் பிரதம வேட்பாளராக இருப்பார் என்று கூறப்பட்ட நிலையில் இன்று சட்டமன்றத்தில் பேசிய நிதிஷ் குமார் தனக்கு பிரதமராகும் நோக்கம் எதுவும் கிடையாது என்றும் பீகார் மாநிலத்தின் வளர்ச்சிக்காக மட்டுமே தான் போகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்
 
மேலும் பீகார் சட்டசபையில் இன்று நடந்த வாக்கெடுப்பில் நிதிஷ்குமார் தலைமையிலான கட்சி முழு ஆதரவு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது