செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 1 ஜனவரி 2019 (12:09 IST)

மக்களவைத் தேர்தலில் நடிகர் பிரகாஷ்ராஜ் போட்டி

நடிகர் பிரகாஷராஜ் நடக்க இருக்கும் மக்களவைத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட இருப்பதாக அறிவித்துள்ளார்.

நடிகர் பிரகாஷ்ராஜ் தனது தோழி கௌரி லங்கேஷை இந்துத்வாவாதி ஒருவர் சுட்டுக்கொன்றதில் இருந்து தீவிரமாக அரசியல் பேசி வருகிறார். அதிலும் இந்துத்வா அரசியலையும் சங்பரிவார் அமைப்புகளையும் எதிர்த்து பல்வேறு அரசியல் கூட்டங்களில் கடுமையாகப் பேசி வருகிறார். சமீபத்தில் கொல்கத்தாவில் நடந்த மாணவர் அமைப்புப் போராட்டத்திலும் கலந்துகொண்டு பேசினார். இதனால் பிரகாஷ்ராஜ் அரசியல் வருகை குறித்த பேச்சுகள் அவ்வப்போது எழுந்தன.

இதையடுத்து புத்தாண்டை முன்னிட்டு வாழ்த்துக் கூறியுள்ள அவர் ரசிகர்களுக்கு தனது அரசியல் வருகையையும் அறிவித்திருக்கிறார். அந்த டிவிட்டில் ‘அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்..  பொறுப்புகள் அதிகமாகியுள்ளன… உங்களின் துணையோடு நான் வர இருக்கும் பாரளுமன்றத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட இருக்கிறேன். தொகுதி குறித்த விவரங்கள் விரைவில்’ என அறிவித்துள்ளார்.

இதுபோல இந்து அமைப்புகள் மற்றும் சங் பரிவார் ஆகியோரை எதிர்த்துப் பேசுவதால் பாலுவுட்டில் தனது பட வாய்ப்புகளை இழந்துள்ளதாகவும் கூறியிருக்கிறார்.  அதனால் பட வாய்ப்புகள் குறைந்ததால் அரசியலில் ஈடுபட்டுள்ளதாகவும் விமர்சனங்கள் எழ ஆரம்பித்துள்ளன.