1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 26 டிசம்பர் 2018 (16:49 IST)

காணமல் போன அமமுக பிரமுகர் எலும்புக்கூடாக மீட்கப்பட்ட சோகம்

85 நாட்களுக்கு முன்னர் காணாமல் போன அமமுக பிரமுகர் ஜெயவேணு எழும்புக்கூடாக மீட்கப்பட்டது தூத்துக்குடியில் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியை சேர்ந்தவர் ஜெயவேணு அமுமுக நகர செயலாளராக இருந்து வந்தார். இவர் கோவையில் நடந்த கொலை முயற்சி வழக்கில் சாட்சி சொல்வதற்காக அடிக்கடி கோவை சென்று வந்துள்ளார். 
 
இந்நிலையில் குறிப்பிட்ட நாளன்று கோவை சென்ற அவர் திரும்பி வராததால் ஜெயவேணுவின் மனைவி போலீஸில் புகார் அளித்துள்ளார். மேலும், அவரது நண்பர்கள் சுரேஷ் மற்றும் ரமேஷ் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். 
 
இதன்பின்னர் சுரேஷ் தூக்கு போட்டு தற்கொலை செய்துக்கொள்ள போலீஸார் தங்களது விசாரணையை தீவிரமாக்கினர். பின்னர் ரமேஷை விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்தனர். 
 
இதன்பின்னர் ரமேஷ் அளித்த வாக்குமூலம் பின்வருமாறு, மூவரும் அனறு மது அருந்தினோம். அளவுக்கு அதிகமாக மது அருந்தியதும் அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஜெயவேணுவை ராஜேஷ் கொலை செய்து, இருசக்கர வாகனத்தில் உடலை வைத்து கட்டி அருகில் உள்ள 150 அடி ஆழமுள்ள பாழடைந்த கிணற்றில் வீசிவிட்டு சென்றதாக தெரிவித்துள்ளார். 
 
அந்த கிணற்றில் குப்பைகள் கொட்டப்பட்டுவிட்டதால் நீண்ட முயற்சிக்கு பின்னர் எலும்பு கூடாக ஜெயவேணுவின் உடல் தேடி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.