திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: திங்கள், 2 அக்டோபர் 2017 (23:50 IST)

நான் அப்படி பேசவே இல்லை! திடீரென பல்டி அடித்த பிரகாஷ்ராஜ்

பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து பெங்களூரில் இன்று நடந்த கூட்டம் ஒன்றில் பிரபல நடிகர் பிரகாஷ்ராஜூம் கலந்து கொண்டார்.



 
 
இந்த கூட்டத்தில் அவர் பிரதமர் தன்னைவிட ஒரு பெரிய நடிகர் என்றும், குறைந்தபட்சம் கெளரி லங்கேஷ் கொலைக்கு கண்டனம் கூட அவர் தெரிவிக்கவில்லை என்றும் பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
மேலும் தேசிய விருதுகளைத் திரும்ப அளிக்க பிரகாஷ் ராஜ் முடிவெடுத்து விட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இதுகுறித்து கூறிய பிரகாஷ்ராஜ், 'இந்த மாதிரியான செய்திகளை கேட்டு எனக்கு சிரிப்புதான் வந்தது. தேசிய விருதுகளைப் பெருமையாகக் கருதுகிறேன். எனது உழைப்புக் கிடைத்த அங்கீகாரமான அவற்றைத் திரும்ப அளிக்கும் வகையிலான முட்டாள் நானில்லை' என்று கூறினார். பிரகாஷ்ராஜ் உண்மையிலேயே பல்டி அடித்தாரா? என்பதை அந்த கூட்டத்தின் வீடியோ வெளிவந்தால் தெரியும்