1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Updated : செவ்வாய், 26 செப்டம்பர் 2017 (15:19 IST)

தேசிய விருதை ஏற்க மாட்டேன்; விஜய் சேதுபதி காட்டம்

நாம் மத்திய அரசால் இறுக்கப்பட்டு வருகிறோம், நான் தேசிய விருதை ஏற்க மாட்டேன் என விஜய் சேதுபதி உணர்ச்சிவசமாக பேசியுள்ளார்.


 

 
விஜய் சேதுபதி நடித்துள்ள ஜல்லிக்கட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள கருப்பன் திரைப்படம் வரும் 29ஆம் தேதி திரையில் வெளியாக உள்ளது. இந்நிலையில் கருப்பன் திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அதில் விஜய்சேதுபதியிடம் இந்த படத்திற்கு தேசிய விருது கிடைத்தால் ஏற்பீர்களா என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது:-
 
இது இப்போதைக்கு பதிலளிக்க முடியாத ஒரு கேள்வி. ஒருவேளை அப்படி நிகழ்ந்தாலும் நிச்சயம் தேசிய விருதை ஏற்க மாட்டேன். என் மக்களும், என் மாநிலமும்தான் எனக்கு முக்கியம். நாம் மத்திய அரசால் இறுக்கப்பட்டு வருகின்றனர். நான் ஏற்கனவே தமிழ் மொழி ரயில் பயணச்சீட்டில் இருந்து நீக்கப்பட்டதற்கு வருத்ததில் உள்ளேன். அது என்னை மிகவும் வருத்தம் அடைய செய்துள்ளது என்றார்.
 
மேலும், நாம் உணர்ச்சிகளை காட்டிலும் செயலில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றார்.