புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam
Last Updated : திங்கள், 1 மே 2017 (14:04 IST)

“தேசிய விருது கிடக்கட்டும்… எனக்கு விஜய்தான் முக்கியம்”

“தேசிய விருது கிடக்கட்டும்… எனக்கு விஜய்தான் முக்கியம்”

தேசிய விருதைவிட, தனக்கு விஜய்தான் முக்கியம் எனத் தெரிவித்துள்ளார் குழந்தை நட்சத்திரமான ஆதிஷ் பிரவின்.


 
 
கேரளாவைச் சேர்ந்த ஆதிஷ், ‘குஞ்சு தய்வம்’ என்ற மலையாளப் படத்தில் நடித்துள்ளார். இதற்காக அவருக்கு சமீபத்தில் தேசிய விருது அறிவிக்கப்பட்டது. இதுகுறித்துப் பேசுவதற்காக பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர், “தேசிய விருதைவிட, விஜய்யை சந்திப்பதுதான் என்னுடைய வாழ்நாள் லட்சியம்” என்று கூறியிருக்கிறார்.
 
இந்தத் தகவல், விஜய்யிடம் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், அவரோ அட்லீ படப்பிடிப்பில் செம பிஸி. தற்போது கொஞ்சம் ஓய்வு கிடைக்க, உடனடியாக ஆதிஷ் பிரவினையும், அவருடைய பெற்றோரையும் சென்னைக்கு வரவழைத்திருக்கிறார்.
 
சுமார் ஒரு மணி நேரம் மலையாளத்திலேயே இருவரும் பேசியிருக்கிறார்கள். “உங்களைப் போலவே பெரிய நடிகனாகணும்” என்று ஆதிஷ் சொல்ல, “திறமையும், தகுதியும் இருந்தால் நிச்சயம் வரலாம்” என்று சொல்லி வாழ்த்தியிருக்கிறார் விஜய்.