திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 30 ஜனவரி 2018 (23:22 IST)

தபால் ஊழியர்களுக்கு புதிய சீருடை. அமைச்சர் அறிமுகம்

இந்தியாவில் உள்ள தபால் ஊழியர்கள் காக்கி சீருடையையே இதுவரை அணிந்து வந்த நிலையில் இன்று முதல் அவர்களுக்கு புதிய சீருடை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

புதிய சீருடையும் அதே காக்கி நிறத்தில் இருந்தாலும் இது கதர் துணியால் தயார் செய்யப்பட்டது என்றும், இதனால் கோடிக்கணக்கான கதர் உற்பத்தியாளர்கள் பயன்பெறுவது மட்டுமின்றி கதராடை உடலுக்கும் நல்லது என்றும் கூறப்படுகிறது

இன்று டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இந்த புதிய சீருடையை மத்திய அமைச்சர் மனோஜ் சின்ஹா அறிமுகம் செய்து வைத்துள்ளார். ரூ48 கோடி செலவில் 90,000 தபால் ஊழியர்களுக்கு இந்த சீருடை தயார் செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள இந்தியன் இன்ஸ்ட்டியூட் இந்த சீருடையின் டிசைனை வடிவமைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.