சம்பளம் பத்தவில்லை என்றால் வேறு வேலைக்கு போங்கள்; உயர் நீதிமன்ற நீதிபதி
சம்பள உயர்வு மற்றும் நிலுவைத் தொகை குறித்தான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து, தமிழக போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், பொதுமக்கள் பேருந்துகள் இன்றி பயணத்திற்கு சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை தாமாக முன்வந்து பொதுநல வழக்காக எடுத்து வேலை நிறுத்தத்தை சட்டவிரோதமாக அறிவிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் போக்குவரத்து ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும். இல்லையேல், கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என உயர் நீதிமன்றம் எச்சரித்தது.
மேலும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு சம்பளம் பத்தவில்லை என்றால் வேறு வேலைக்கு செல்லுங்கள் அல்லது மக்களுக்கு இடையூறு அளிக்காமல் பணிக்கு திரும்புங்கள் இல்லையேல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்களை பணியில் இருந்து நீக்க நேரிடும் என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பேனர்ஜி தெரிவித்துள்ளார். நீதிபதியின் இந்த கருத்தை பலரும் விமர்சித்து வருகின்றனர்.