செவ்வாய், 25 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 22 ஜனவரி 2025 (16:21 IST)

பாஜக அரசுக்கு அளித்து வந்த ஆதரவு வாபஸ்.. நிதிஷ் குமார் கட்சி அறிவிப்பு..!

மணிப்பூர் மாநிலத்தில் பாஜக அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி அறிவித்துள்ளது.  

60 உறுப்பினர்கள் கொண்ட மணிப்பூர் சட்டசபைக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு தேர்தல் நடந்த நிலையில், பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. அந்த கட்சிக்கு மட்டும் 32 தொகுதிகள் கிடைத்தது என்பது இதனை அடுத்த தற்போது அங்கு பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

60 உறுப்பினர்கள் கொண்ட மணிப்பூர் சட்டசபையில், ஐக்கிய ஜனதா தளத்தின் கட்சிக்கு ஒரே ஒரு எம்எல்ஏ மட்டும் இருக்கும் நிலையில், அந்த எம்எல்ஏ தனது ஆதரவை வாபஸ் பெற்று விட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பாஜக கட்சிக்கு தனிப்பெரும் மெஜாரிட்டி இருப்பதால், ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் ஆறு எம்எல்ஏக்கள் கொண்ட தேசிய மக்கள் கட்சி பாஜக அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மணிப்பூரில் மொத்தம் 60 தொகுதிகள் மட்டுமே உள்ள நிலையில், அதில் 31  எம்எல்ஏக்கள் வைத்திருந்தாலே தனிப்பெரும் ஆட்சி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் பாஜகவிடம் 32 எம்எல்ஏக்கள் இருப்பதால், அக்கட்சி ஐந்து வருடம் முழுமையாக ஆட்சி செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

மணிப்பூரில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தள கட்சி வாபஸ் பெற்றாலும் மத்தியில் உள்ள பாஜக கூட்டணிக்கு அக்கட்சியின் ஆதரவு தொடர்ந்து வருகிறது என்பதும் அந்த கட்சிக்கு 12 எம் பி க்கள் உள்ளனர் என்பது குறிப்பிடப்பட்டது.

Edited by Mahendran