1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : வியாழன், 24 ஆகஸ்ட் 2017 (17:14 IST)

சாலையோர பிச்சைக்காரரிடம் பணம் பறித்த போலீஸ் கைது

ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதியில் சாலையோர பிச்சைக்காரரிடம் இருந்து பணம் பறித்த போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.


 

 
ஜம்மு மற்றும் காஷ்மீர் ராம்பன் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் சாலையோரத்தில் இருந்த பிச்சைக்காரரிடம் இருந்து காவலர் ஒருவர் பணம் பறித்துள்ளார். இதனை பார்த்த மற்றொரு காவலர் அவரை கைது செய்தார்.
 
இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வீடியோவாக வலம் வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட அந்த காவலர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். அந்த காவலர் முன்பு வேலைப்பார்த்த கிஷ்த்வார் பகுதியில் மட்டும் 3 வழக்குகளும் பதிவாகியுள்ளன.