1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 14 ஆகஸ்ட் 2017 (13:41 IST)

மாணவியுடன் உல்லாசமாக இருந்த ஆபாச படத்தை வாட்ஸ்அப்பில் வெளியிட்ட போலீஸ் கைது

கல்லூரி மாணவியுடன் உல்லாசம் அனுபவித்துவிட்டு, அவருடன் நெருக்கமாக இருந்த ஆபாச படத்தை வாட்ஸ்அப்பில் வெளியிட்ட போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.


 

 
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள வேம்பூரை சேர்ந்த மணிகண்டன்(30) ஆரோவில் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். அந்த பகுதியில் உள்ள அம்மன் கோவில் பாதுகாப்பு பணிக்காக மணிகண்டன் அடிக்கடி சென்று வந்தார். அங்கு கடை நடத்தி வந்த புதுவையை சேர்ந்த பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கல்லூரியில் பயிலும் அந்த பெண்ணின் மகள் விடுமுறையின் போது கடைக்கு வருவது வழக்கம். அப்போது அந்த மாணவிக்கும், காவலருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
 
இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி இருவரும் அடிக்கடி சந்தித்து வந்துள்ளனர். இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். இதனிடையே மணிகண்டன் கிளியனூர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். மணிகண்டன் அந்த மாணவிக்கு தெரியாமல் இருவரும் நெருக்கமாக இருந்ததை செல்போனில் படம்பிடித்து வைத்திருந்துள்ளார். 
 
இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது மணிகண்டனுக்கு திருமணமாகி குழந்தைகள் இருப்பது அந்த மாணவிக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்த மாணவி மணிகண்டனுடன் பழகுவதை நிறுத்திக்கொண்டார். இந்நிலையில் மணிகண்டன் அந்த மாணவியை செல்போனில் தொடர்பு கொண்டு தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார். 
 
மாணவி மறுப்பு தெரிவிக்க மணிகண்டன், இருவரும் நெருக்கமாக இருக்கும் ஆபாச படத்தை மாணவியின் வீட்டாருக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பிவிடுவேன் என மிரட்டியுள்ளார். மாணவி அவரது மிரட்டலுக்கு பணியாததால் மணிகண்டன் ஆபாச படங்களை மாணவியின் தந்தைக்கும், அண்ணனுக்கும் வாட்ஸ்அப்பில் அனுப்பியுள்ளார். 
 
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் மணிகண்டன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி மணிகண்டன் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.