வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 25 ஆகஸ்ட் 2020 (08:27 IST)

”கேஸ் போடக்கூடாதுன்னா அதை செய்யணும்” – சில்மிஷம் செய்த போலீஸ் சஸ்பெண்ட்!

ஆந்திராவில் இளம்பெண்ணை வழக்குப்பதிவு செய்வதாக மிரட்டி படுக்கைக்கு அழைத்த காவல் உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரா மாநிலத்தில் உள்ள துங்கபேட்டா என்ற பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக சிலர் மதுப்பாட்டில்களை பதுக்கி விற்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து போலீஸார் அந்த பகுதியில் சோதனை நடத்திய போது அப்பாராவ் என்பவரின் வீட்டில் மதுப்பாட்டில்கள் பெட்டியில் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அப்பாராவின் இளம்வயது மகளின் மீது சல்லாபம் கொண்ட காவல் துணை ஆய்வாளர் ராமகிருஷ்ணா இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்திருக்கிறார். பிறகு இளம்பெண்ணிடம் செல்போன் எண்ணை பெற்றுக் கொண்டு அனுப்பியிருக்கிறார்.

பிறகு சாவகாசமாக இளம்பெண்ணுக்கு போன் செய்த ராமகிருஷ்ணா தன் ஆசைக்கு இணங்கினால் விட்டுவிடுவதாகவும், இல்லாவிட்டால் வழக்குப்பதிவு செய்து விடுவதாகவும் இளம்பெண்ணிடம் ஆபாசமாக பேசியுள்ளார். ராமகிருஷ்ணா பேசியதை இளம்பெண் ரெக்கார்ட் செய்து உயர் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளார். அதை தொடர்ந்து ராம்கிருஷ்ணா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.