வெள்ளி, 2 டிசம்பர் 2022
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified வியாழன், 24 நவம்பர் 2022 (11:23 IST)

581 கிலோ கஞ்சாவை எலிகள் சாப்பிட்டதா? விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

rats
581 கிலோ கஞ்சாவை எலிகள் சாப்பிட்டதா? விசாரணையில் அதிர்ச்சி தகவல்!
குற்றவாளிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 581 கிலோ கஞ்சாவை எலிகள் சாப்பிட்டு விட்டதாக அதிகாரிகள் நீதிமன்றத்தில் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த மதுரா நகர போலீஸ் சமீபத்தில் 581 கிலோ கஞ்சாவை குற்றவாளிகளிடம் இருந்து கைப்பற்றினர். இந்த கஞ்சாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்ட போது அனைத்தையும் எலிகள் சாப்பிட்டு விட்டதாக போலீசார் நீதிமன்றத்தில் தெரிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இதுகுறித்த விசாரணையில் பறிமுதல் செய்த கஞ்சாவை வேறு ஒருவரிடத்தில் விற்றுவிட்டு எலிகள் மீது பழி சுமத்தியது அம்பலமாகியுள்ளதை அடுத்து போலீசார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன 
 
581 கிலோ கஞ்சாவை விற்றுவிட்டு எலிகள் சாப்பிட்டு விட்டதாக போலீசாரை கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran