1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 18 நவம்பர் 2022 (16:52 IST)

''கஞ்சா போதையில் காதலியைக் கொன்றேன்''- யூடியூபர் அஃப்தாப் தகவல்

delhi aftb  case
மஹாராஷ்டிரத்தில் இருந்து டெல்லியில் குடியேறி வசிதிது வந்த யூடியூபர் அஃப்தாப் தன் காதலி ஷ்ரத்தாவுடன் லிவ்இன் முறையில் வசித்து வந்த  நிலையில், அவர்களுக்கு இடையே பிரச்சனை வந்ததாக முதலில் கூறப்பட்டது.

எனவே, கடந்த மே 18 ஆம் தேதி அஃப்தப், ஷ்ரத்தாவை கொலை செய்து, அவது உடலை 35 துண்டுகளாக வெட்டி 18 நாட்கள் பிரிட்ஜில் வைத்து, டெல்லியில் ஒவ்வொரு பகுதியில் வீசியதாக அவர் வாக்கு மூலம் அளித்த நிலையில் அவரை போலீஸார் கைது செய்து ,  உண்மை கண்டறியும் சோதனை முடிவு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

இந்த வழக்கில்,  அஃப்தாப்பிடம் விசாரணை செய்ய வேண்டியுள்ளது என  போலீஸ் தரப்பில் கூறப்பட்ட  நிலையில், போலீஸ்  காவலை மேலும், 5 நட்களுக்கு நீட்டித்து டெல்லி நீதிமன்றம் இன்று உத்தரவிட்டிருந்தது.

அஃப்தாப்பிடம் போலீஸார் விசாரிக்கையில், மற்றொரு  புதிய தகவலை அவர் கூறியுள்ளார்.


அதில், கஞ்சாப் பழக்கத்தை விட்டுவிடும்படி, ஷ்ரத்தா என்னிடம் அடிக்கடி சண்டை போட்டதால், அப்படி செய்தேன். அவரை கொலை செய்ய வேண்டும் எனத் திட்டமிடவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இந்தக் கொலையில் வேறு யாருக்கு தொடர்புள்ளது என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Edited by Sinoj