புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 24 ஜூலை 2019 (13:27 IST)

கங்கையில் அடித்து சென்றவரை பாய்ந்து சென்று காப்பாற்றிய போலீஸ் – வீடியோ

உத்தரகண்ட் மாநிலத்தில் கங்கை நதியில் அடித்து செல்லப்பட்டவரை நீருக்குள் பாய்ந்து சென்று போலீஸ் ஒருவர் காப்பாற்றிய வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

ஹரியானாவை சேர்ந்த விஷால் என்பவர் புனித ஸ்தலமான ஹரித்வார்க்கு பயணம் சென்றிருக்கிறார். அங்கே கங்கை நதியில் நீராடியபோது கால் தவறி ஆற்றுக்குள் விழுந்து விட்டார். தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட அவரை காப்பாற்ற ஆற்றினுள் பாய்ந்தார் போலீஸ் ஒருவர். அடித்து செல்லும் நீரில் வேகமாக நீந்தி சென்று அவரை மீட்டு கரை சேர்ந்தார் அந்த துணிச்சல் மிக்க காவலர்.

கரையில் நின்றிருந்தவர்கள் அதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். காவலரின் வீரமிக்க செயலை பாராட்டி பலரும் அதை பகிர்ந்து வருகின்றனர்.