திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 23 ஜூலை 2019 (19:51 IST)

உள்ளூர் மக்களுக்கு 75 சதவீதம் வேலைவாய்ப்பு – அதிரடி செய்யும் ஜெகன் மோகன்

அனைத்து தனியார் நிறுவனங்களிலும் உள்ளூர் மக்களுக்கு 75 சதவீதம் வேலைவாய்ப்பை வழங்க செய்யும் புதிய மசோதா ஆந்திர அமைச்சரவையில் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

மாநில அரசுகளிடம் அனுமதி பெற்று தொழிற்சாலை அமைக்கும் தனியார் நிறுவனங்கள் தங்கள் பணிகளுக்கு வேறு மாநிலத்தவரை வேலைக்கு அமர்த்துகின்றனர். இது நாடு முழுவதும் உள்ள நடைமுறையாகும். இதனால் உள்ளூர் மக்களுக்கு வேலையில்லா திண்டாட்டம் ஏற்படுவதுடன், வேலைக்காக அவர்கள் தங்கள் ஊர்களை விட்டு வெளியேரும் சூழலும் இருக்கிறது.

இதை கருத்தில் கொண்டு அரசு உதவி பெறும் மற்றும் உதவி பெறாத தனியார் நிறுவனங்கள் தாங்கள் தொழிற்சாலைகள், வளாகங்கள் அமைக்கும் இடங்களில் 75 சதவீதம் அந்த பகுதியை சேர்ந்த உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பினை அளிக்க வேண்டும். மீத 25 சதவீதத்தை அவர்கள் விருப்பப்படி பணியமர்த்தி கொள்ளலாம்.

ஒருவேளை உள்ளூர் மக்களுக்கு அந்த வேலை குறித்த அனுபவம் இல்லை என்றால் அவர்களுக்கு பயிர்சி மையத்தின் மூலம் போதிய அளவு பயிற்சி அளித்து பணியமர்த்தி கொள்ள வேண்டும் என்ற புதிய மசோதாவை நிரைவேற்றியுள்ளது. இதனால் மாநிலத்தில் வேலையில்லா திண்டாட்டம் குறைவதுடன், வேலை தேடி வெளிமாநிலங்கள் செல்வோரின் எண்ணிக்கையும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டிலேயே முதன்முறையாக இந்த சட்டம் ஆந்திராவில்தான் நிறைவேற்றப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.