செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 10 ஜனவரி 2022 (10:31 IST)

மீசையால் வேலைக்கு வந்த சிக்கல்… ஆனாலும் போலிஸ்காரரின் முடிவு இதுதான்!

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்டுக்கிடாய் மீசையுடன் சுற்றி வந்த கான்ஸ்டபிள் ஒருவர் உயர் அதிகாரிகளால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

மத்திய பிரதேச மாநில மோட்டார் ட்ரான்ஸ்போர்ட் பிரிவில் கான்ஸ்டபிளாக பணிபுரிபவர் ராகேஷ் ராணா. இவர் தனது மீசையை மிகப்பெரியதாக வளர்த்து வந்துள்ளார். இது சம்மந்தமாக அவரைக் கண்டித்த உயரதிகாரிகள் அடுத்த முறை மீசையை ட்ரிம் செய்யவேண்டும் எனக் கூறியுள்ளனர். ஆனால் தன் மீசையை எடுக்க ராகேஷ் ஒத்துக்கொள்ளவில்லை.

இதனால் ஒழுங்கு நடவடிக்கையாக அவரை இப்போது பணியிடை நீக்கம் செய்துள்ளனர். இது சம்மந்தமாக பேசியுள்ள ராகேஷ் ராணா ‘என்னுடைய மீசையை நான் எடுக்கப்போவதில்லை. ஏனென்றால் அது என் சுயமரியாதை’ எனக் கூறியுள்ளார்.