1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : சனி, 1 ஜனவரி 2022 (16:51 IST)

என்ன காரணம் சொன்னாலும் வேலைக்கு ஆகாது - காண்டாகிய கமல்!

பிக்பாஸ் வீட்டில் டிக்கெட் டூ டாஸ்க் இந்த கடந்த வாரம் முழுக்க பரபரப்பாக நடந்து முடிந்தது. அதில் ஹைலைட்டான ஒன்று தாமரை மற்றும் பிரியங்காவிற்கு இடையே நடந்த சண்டை  தான். இருவரும் ஒருவரை ஒருவர் தடுத்து நிறுத்துகிறேன் என கூறி கை கலப்பில் இறங்கிவிட்டனர். 
 
விதிகளை மீறிய இந்த விளையாட்டை குறித்து கமல் இன்று பஞ்சாயத்து செய்தார். முதல் ப்ரோமோ வெளியானது. அதில், பாதியில் வந்த அமீர் டிக்கெட் டூ பைனலில் முதல் இடத்தை பிடித்திருக்கிறார் என அறிவித்தார். அதையடுத்து கலகலப்பாக இருந்த இந்த பிக்பாஸ் வீடு கை கலப்பில் முடிந்தது. அந்த சம்பவத்தை குறித்து சம்மந்தப்பட்ட இருவரிடையேயும் விசாரணை நடத்தினார் கமல். 
 
அதையடுத்து வெளியான இரண்டாவது ப்ரோமோவில் தாமரை மற்றும் பிரியங்கா இருவரும் காரணத்தை கூறி செய்த தவறை நியாயப்படுத்த முயற்சித்தனர். ஆனால், கமல் அதை ஒப்புக்கொள்ள வைத்தார். 50 லட்சம் பணப்பெட்டியோடு தாமரை வெளியேறிவிடலாம் என ஆடியன்ஸ் கூறி வருகின்றனர்.