புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 22 நவம்பர் 2021 (09:41 IST)

அமேசான் மூலமாக போதைப்பொருள் விற்பனை! – நிர்வாக இயக்குனர்கள் மீது வழக்கு!

அமேசான் தளம் மூலமாக போதைப்பொருள் விற்கப்பட்ட விவகாரத்தில் அமேசான் இந்தியா நிர்வாக இயக்குனர்கள் மீது மத்திய பிரதேச போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்தியாவில் ஆன்லைன் வழியாக பொருட்கள் விற்கும் தளங்களில் மக்களால் அதிகமாக பயன்படுத்தப்படுவதாக அமேசான் உள்ளது. இந்த தளத்தில் பல்வேறு பொருட்களும் விற்பனையாளர்கள் மூலமாக விற்கப்படும் நிலையில் போதைப்பொருள் இந்த தளம் மூலமாக விற்கப்பட்டதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவை சேர்ந்த சூரஜ் கல்லு பாவய்யா என்பவர் ஏஎஸ்எஸ்எல் என்ற பெயரில் அமேசானில் தனது நிறுவனத்தை பதிவு செய்து அதன் மூலம் போதைப்பொருட்களை நாடு முழுவதும் பல இடங்களுக்கு விற்பனை செய்ததாக போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் அமேசான் இந்தியா நிர்வாக இயக்குனர்கள் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது, விரைவில் அவர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்படும் என கூறப்படுகிறது.