1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth K
Last Modified: ஞாயிறு, 8 ஜூன் 2025 (12:27 IST)

வேறு நபருடன் உல்லாசம்: மனைவி தலையை வெட்டி எடுத்துக் கொண்டு போலீஸ் ஸ்டேஷன் சென்ற கணவன்!

பெங்களூரில் மனைவி வேறு ஒருவருடன் தொடர்பில் இருந்ததால் ஆத்திரத்தில் தலையை வெட்டி எடுத்துக் கொண்டு போலீஸ் ஸ்டேஷன் சென்ற கணவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

பெங்களூர் ஹீலலிகேயில் வசித்துக் கொண்டு தனியார் நிறுவனம் ஒன்றில் உதவி மேலாளராக பணிபுரிந்து வருபவர் சங்கர். இவருக்கும் அதே நிறுவனத்தை சேர்ந்த மானசா என்ற பெண்ணுக்கும் காதல் மலர்ந்த நிலையில் சில ஆண்டுகள் முன்னதாக இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களுக்கு 3 வயதில் குழந்தை ஒன்றும் உள்ளது.

 

இந்நிலையில் மானசா கடந்த சில காலமாக அந்த நிறுவனத்தை சேர்ந்த வேறு ஒரு நபருடன் ரகசியமாக பழகி வந்ததாகவும், தனிமையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக சங்கர் - மானசா இடையே அடிக்கடி வாக்குவாதம் எழுந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்றும் சண்டை நடந்த நிலையில் ஆத்திரமடைந்த சங்கர், மானசாவின் தலையை தனியாக வெட்டி எடுத்து கொடூரமாக கொலை செய்துள்ளார். பின்னர் மானசாவின் தலையை ஒரு பையில் போட்டு எடுத்துக் கொண்டு நேராக ஸ்கூட்டரில் ரயில்வே நிலையம் வழியாக சென்றுள்ளார். அப்போது அங்கு ரோந்து பணியில் இருந்த போலீஸாரை சந்தித்து தனது மனைவியை தான் கொன்று விட்டதாக தலையை எடுத்துக் காட்டியுள்ளார்.

 

இதனால் அதிர்ச்சியில் உறைந்த போலீஸார் அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவரிடம் இருந்த மானசாவின் தலையையும், வீட்டில் கிடந்த உடலையும் பறிமுதல் செய்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K