அருண்ஜெட்லி உடல்நிலை மிகவும் மோசம்: பூடானில் இருந்து திரும்பி வந்த பிரதமர்

arun jaitley
Last Modified ஞாயிறு, 18 ஆகஸ்ட் 2019 (19:37 IST)
முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி, மூச்சு திணறல் காரணமாக கடந்த 9ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இருப்பினும் அவருடைய உடல் நிலை தொடந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவ வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததையடுத்து அவருக்கு உயிர்காக்கும் கருவிகள் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவருடைய உயிரை காப்பாற்ற மருத்துவர்கள் போராடி வருகின்றனர்.


இந்த நிலையில் அருண்ஜெட்லியின் உடல் மோசமான தகவலை அறிந்த பிரதமர் மோடி பூடான் பயணத்தை நிறைவு செய்து விட்டு நாடு திரும்பினார். பிரதமர் மோடி இன்னும் ஒருசில நிமிடங்களில் அருண் ஜெட்லியை காண எய்ம்ஸ் மருத்துவமனைக்கு செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது


இதில் மேலும் படிக்கவும் :