வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 17 ஆகஸ்ட் 2019 (09:40 IST)

டி.வி.எஸ்.ஐ அடுத்து விடுமுறை அறிவித்த மற்றொரு நிறுவனம் – அதளபாதாளத்துக்கு செல்லும் ஆட்டோமொபைல்ஸ் !

டிவிஎஸ் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு விடுமுறை அறிவித்ததைப் போல இப்போது ஹீரோ நிறுவனமும் வேலையில்லா விடுமுறை நாளை அறிவித்துள்ளது.

டிவிஎஸ் நிறுவனத்தின் அங்கமான டிவிஎஸ் லூகாஸ், ஸ்பேர் ஸ்பார்ட்ஸ் தயாரிப்பில் முக்கியப் பங்காற்றி வருகிறது. சென்னையின் , பாடி பகுதியில் இதன் தொழிற்சாலை அமைந்துள்ளது.  இந்நிறுவனம் வியாபார மந்தநிலை காரணமாக ஏற்கெனவே சில நாட்களை வேலையில்லா நாட்களாக அறிவித்திருந்தது. இப்போது இதன் மூன்று பிரிவு ஊழியர்களைத் தவிர மற்றவர்கள் அனைவருக்கும் இரன்டு நாட்கள் விடுமுறை அறிவித்துள்ளது. தமிழகத்தின் முக்கியமான நிறுவனமான டிவிஎஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டதால் பரபரப்பான விவாதங்கள் எழுந்தன.

இதையடுத்து இப்போது மற்றொரு ஹீரோ மோட்டோ கார்ப்பரேஷன் நிறுவனம் நான்கு நாள்கள் உற்பத்தியை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. வியாபார மந்தநிலை காரணமாக ஆகஸ்ட் 15 முதல் 18 வரை நான்கு நாள்கள் வேலையில்லா நாள்களாக அறிவிக்கப்படுவதாக நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியாபார மந்தநிலை காரணமாக தொடர்ந்து முன்னணி நிறுவனங்கள் வேலை நாள்களை குறைத்துவருகின்றன. மந்தநிலை உடனடியாக சரிசெய்யப்பட்டு உடனடியாக மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பாவிட்டால் லட்சக்கணக்கான ஊழியர்கள் இதனால் பாதிக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது.