வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 23 டிசம்பர் 2022 (10:38 IST)

நான் ஒரு கிறிஸ்டியன்.. அந்த உரிமையில் பேசுகிறேன்! – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

udhayanithi
சென்னையில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின் தான் ஒரு கிறிஸ்தவர் என பேசியுள்ளார்.

சென்னையில் மண்ணடியில் உள்ள டான் பாஸ்கொ பள்ளி வளாகத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் திமுக சார்பில் அன்பளிப்புகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் புதிதாக விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலின், இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பொதுமக்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசு பொருட்களை வழங்கி பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் “நான் ஒரு கிறிஸ்தவன் என்று சொல்வதில் பெருமை கொள்கிறேன். நான் டான் பாஸ்கோ பள்ளியில்தான் படித்தேன். கல்லூரி படிப்பை லயோலாவில் முடித்தேன். ஒரு கிறிஸ்தவ பெண்ணை திருமணம் செய்து கொண்டேன். அந்த உரிமையில்தான் இங்கு பேச வந்துள்ளேன்” என கூறியுள்ளார்.

மேலும், “நான் என்னை ஒரு கிறிஸ்தவன் என இங்கு பேசியதும், இந்து அறநிலையத்துறை அமைச்சர் அல்லேலூயா சொல்லி கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவிப்பதும் சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தலாம்” என்று மறைமுகமாக பேசியுள்ளார்.

Edit By Prasanth.K