1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. PM Modi wishes for Bhakrid

இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்! – பிரதமர் நாட்டு மக்களுக்கு வாழ்த்து!

Bhakrid
இன்று இஸ்லாமிய பண்டிகையான பக்ரீத் கொண்டாடப்படும் நிலையில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய மக்களின் பண்டிகைகளில் முக்கியமான பண்டிகையான பக்ரீத் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று அதிகாலையிலேயே மசூதிகளில் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன.

தியாக திருநாள் என்று அழைக்கப்படும் இந்த நாள் ”ஈத் அல் அதா” என்றும் அழைக்கப்படுகிறது. இன்று பக்ரீத் பெருநாளில் வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி “ஈத் முபாரக். ஈத் அல் அதா வாழ்த்துக்கள். மனித குலத்தின் நன்மைக்காக கூட்டு நல்வாழ்வு மற்றும் செழுமைக்கான உணர்வை மேலும் மேம்படுத்துவதற்கு இந்த பண்டிகை நம்மை ஊக்குவிக்கட்டும்” என்று கூறியுள்ளார். பக்ரீத் பண்டிகையில் மேலும் பல பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
அதிகரிக்கும் கொரோனா! இன்று ஒரு லட்சம் தடுப்பூசி முகாம்கள்!