வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 17 ஜனவரி 2021 (11:31 IST)

அரசியலிலும், சினிமாவிலும் அவர் மரியாதையே தனி! – எம்ஜிஆர் குறித்து பிரதமர் மோடி ட்வீட்!

தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் அவர் குறித்து பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

தமிழக முன்னாள் முதல்வரும், திரைத்துறை நடிகருமாக மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர் எம்ஜிஆர். ஆண்டுதோறும் ஜனவரி 17 அவரது பிறந்த நாள் அதிமுகவினரால் தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்றும் தமிழகம் முழுவதும் அதிமுகவினர் பல இடங்களில் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

இந்நிலையில் எம்ஜிஆர் குறித்து தமிழில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி “பாரதரத்னா எம்ஜிஆர் பலரது இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். திரையுலகிலும் அரசியலிலும் அவர் பரவலாக மதிக்கப்பட்டார். அவர் முதலமைச்சராக இருந்தபோது, வறுமையை ஒழிக்கவும் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவும் பல முயற்சிகளைத் தொடங்கினார். அவரது பிறந்தநாளில் எம்ஜிஆருக்கு எனது புகழ் வணக்கம்” என தெரிவித்துள்ளார்.