செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 17 ஜனவரி 2021 (10:25 IST)

கேரளாவை பாத்து பெண்ணுரிமை கத்துக்கோங்க! – திராவிட கட்சிகளை பங்கம் செய்த காயத்ரி ரகுராம்

பொங்கல் விழாவில் பேசிய பாஜக கலாச்சார பிரிவு தலைவர் காயத்ரி ரகுராம் திராவிட கட்சிகள் பெண்களை மதிப்பதில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் பொங்கல் விழாவையொட்டி பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் ’நம்ம ஊரு பொங்கல் விழா’ என்ற பெயரில் விழா கொண்டாடப்பட்டது. இந்நிலையில் கோயம்புத்தூரில் பாஜக மாநில துணைத்தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பாஜக கலாச்சார பிரிவு தலைவர் காயத்ரி ரகுராம் கலந்துகொண்டார்.

அப்போது பேசிய அவர் “திராவிட இயக்கங்கள் எதுவும் பெண்களுக்கு உரிய மரியாதையை அளித்ததே கிடையாது. பெண்ணுரிமை குறித்து தமிழக அரசியல் கட்சிகள் அண்டை மாநிலமான கேரளாவிடம் கற்றுக்கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் உதாயநிதி ஸ்டாலின் பேச்சு குறித்து பெண்கள் அமைப்புகள் கண்டனம் தெரிவித்த நிலையில் காயத்ரி ரகுராம் இவ்வாறு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.