புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 16 ஜூன் 2022 (11:53 IST)

பிரதமரின் தாயாருக்கு 100வது பிறந்தநாள்! – குஜராத் சாலைக்கு ஹிராபா மோடி பெயர்!

Hiraba Modi
பிரதமர் மோடியின் தாயார் விரைவில் 100வது பிறந்தநாள் கொண்டாட உள்ள நிலையில் குஜராத்தில் உள்ள சாலைக்கு அவரது பெயர் சூட்டப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் பிரதமராக பிரதமர் மோடி பதவியேற்று 8 ஆண்டுகள் நிறைவடைந்தது சமீபத்தில் பாஜகவினரால் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் பிரதமரின் தயார் ஹிராபா மோடி எதிர்வரும் 18ம் தேதியில் தனது 100வது பிறந்தநாளை காண்கிறார். அவரது 100வது பிறந்தநாளை கொண்டாட அவரது குடும்பத்தினர் தயாராகி வருகின்றனர்.

அன்றைய தினம் பிரதமர் மோடியின் சொந்த கிராமமான வாட்நகரில் உள்ள கோவில் ஹிராபா மோடியின் நலனுக்காக சிறப்பு வழிபாடு நடத்தப்பட உள்ளது. ஜூன் 18ம் தேதியன்று குஜராத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி தனது தாயாரை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது,.

மேலும் குஜராத்தின் காந்தி நகரில் உள்ள 80 மீட்டர் சாலைக்கு பிரதமர் மோடியின் தயார் ஹிராபா மோடியின் பெயர் சூட்டப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கோரிக்கைகளை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்நகர மேயர் தெரிவித்துள்ளார்.