திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 12 டிசம்பர் 2017 (11:17 IST)

முதல்முறையாக கடல் விமானத்தில் பிரதமர் மோடி பயணம்

தண்ணீரில் இருந்து கிளம்பி மீண்டும் தண்ணீரிலேயே இறங்கும் கடல் விமானத்தில் இன்று பிரதமர் மோடி சற்றுமுன்னர் பயணம் செய்தார்.
 
கடல் விமானத்தில் அகமதாபாத்தின் சபர்மதி ஆற்றில் இருந்து தரோய் அணைக்கு பிரதமர் மோடி பயணம் செய்கிறார். தரோய் அணை அருகே உள்ள அம்பாஜி கோயிலுக்கு சென்று தரிசனம் செய்யும் பிரதமர் மோடி பின்னர் மீண்டும் தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்
 
குஜராத் மாநிலத்தில் வரும் 14ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் இன்றுடன் அங்கு தேர்தல் பிரச்சாரம் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.