வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 11 டிசம்பர் 2017 (16:58 IST)

பாகிஸ்தான் பற்றிய விமர்சனம்; மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்: காங்கிரஸ்!!

குஜராத் முதற்கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட தேர்தல் வரும் 14 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் பலன்பூரில் பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
 
அப்போது, காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கூட்டம் நடந்ததாகவும், அந்த கூட்டத்தில், பாகிஸ்தான் தூதர், பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவு அமைச்சர், இந்தியாவின் முன்னாள் துணை ஜனாதிபதி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் கலந்து கொண்டதாகவும் மோடி குறிப்பிட்டார்.
 
மேலும், குஜராத் முதல்வராக காங்கிரசை சேர்ந்த அகமது படேல் போட்டியிடுவதற்கு பாகிஸ்தான் ஆதரவு தெரிவிப்பதாகவும் குற்றம் சாட்டினார். குஜராத் தேர்தலில் காங்கிரசும் பாகிஸ்தானும் சேர்ந்து பாஜகவை வீழ்த்த நினைப்பதாகவும் தெரிவித்தார்.
 
இந்நிலையில், இதர்கு பதிலடி கொடுக்கும் விதமாக அரசியல் கட்சிகள் தங்களது சொந்த பலத்தில் தேர்தலில் வெற்றி பெற்று காட்டட்டும், அதற்கு பதிலாக பாகிஸ்தானை தேவையில்லாமல் சீண்ட வேண்டாம். மோடி, ஆதாரமற்ற செய்திகளை பரப்பிவருகிறார் என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 
 
இது குறித்து காங்கிரஸ் தலைவர் ஆனந்த் சர்மா பேசுகையில், குஜராத் தேர்தலில் காங்கிரஸ் பாகிஸ்தானுடன் இணைந்து சதிதிட்டம் தீட்டுவதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டி உள்ளார். இது மோடியின் விரக்தியை காட்டுகிறது. பாரதீய ஜனதா உறுதியை இழந்துவிட்டது. பிரதமர் மோடி அரசியல் கண்ணியத்தை காக்கவேண்டும். அவர் பேசியதை திரும்ப பெற வேண்டும். அதோடு தவறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.