1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 9 ஜூலை 2023 (09:57 IST)

ஊழலில் இந்த மாநிலம் தான் முதலிடம்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

PM Modi
தெலுங்கானா மாநிலத்தில் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்தியாவிலேயே ஊழல் முறைகேட்டில் முதலிடத்தில் இருப்பது தெலுங்கானா தான் என பிரதமர் மோடி குற்றம் சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
தெலுங்கானா மாநிலத்தில் தற்போது பாரத் ராஷ்டிரிய சமைதி என்ற கட்சி ஆட்சி செய்து வருகிறது என்பதும் சந்திரசேகர ராவ் முதல்வராக இருந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
கடந்த 9 ஆண்டுகளாக இந்த கட்சி ஆட்சியில் இருந்து வரும் நிலையில் ஊழல் அதிகமாகிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் காட்டி வருகின்றன. இந்த நிலையில் தெலுங்கானா மாநிலம் வாரங்கல் என்ற பகுதியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு மாநில அரசை கடுமையாக சாடினார்
 
 ஊழல் முறைகேட்டில் தெலுங்கானாதான் நாட்டிலேயே முதலிடம் வகிக்கிறது என்றும் முதல்வர் கே சந்திரசேகர் ராவ் ஒன்பது ஆண்டுகால ஆட்சியில் ஊழல் அதிகரித்திட்டது என்றும் குற்றம் காட்டினார். தெலுங்கானாவின் ஊழல் டெல்லி வரை பரவியுள்ளது என்றும் கேசிஆரின் முறைகேடுகளை மக்கள் கவனித்து வருகின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார்
 
Edited by Siva