1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 19 ஏப்ரல் 2024 (12:01 IST)

ஒவ்வொரு வாக்கும் முக்கியம்; அனைவரும் தவறாமல் வாக்களியுங்கள்: பிரதமர் மோடி

Modi
பாராளுமன்ற தேர்தல் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கிய நிலையில் ஒவ்வொரு வாக்கும் முக்கியம் என்றும் அனைவரும் கண்டிப்பாக தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார். 
 
தமிழகம் உள்பட ஒரு சில மாநிலங்களில் இன்று வாக்குப்பதிவு தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் பிரதர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்திருப்பதாவது
 
2024 நாடாளுமன்ற தேர்தல் இன்று தொடங்கியுள்ளது. 21 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றுய் வருகிறது. இந்நிலையில், இந்தத் தொகுதிகளில் வாக்களிக்கும் அனைவரும் சாதனை அளவை எட்டும் வகையில் தங்களது வாக்கை செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.
 
குறிப்பாக இளைஞர்கள், முதல்முறை வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில் உங்கள் ஒவ்வொரு வாக்கும் ஒவ்வொரு குரலும் முக்கியமானது என  தமிழ், ஆங்கிலம், இந்தி, மராத்தி, பெங்காலி, அஸ்ஸாமி ஆகிய ஆறு மொழிகளிலும் பதிவு செய்துள்ளார்.
 
Edited by Mahendran