1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 28 ஆகஸ்ட் 2021 (21:06 IST)

ஜாலிபன் வாலாபாக் நினைவிடம்: பிரதமர் திறந்து வைத்தார்

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் நகரில் புதுப்பிக்கப்பட்ட ஜாலியன் வாலாபாக் நினைவிடத்தில் பிரதமர் மோடி காணொலி மூலம் இன்று திறந்து வைத்தார்
 
இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியபோது எண்ணற்ற புரட்சியாளர்களுக்கு தைரியம் அளித்த இடம் ஜாலியன் வாலாபாக் என்ற உதம்சிங், பகத்சிங் போன்ற புரட்சியாளர்களுக்கு உயிரை தியாகம் செய்ய தைரியம் அளித்தது இந்த ஜாலியன் வாலாபாக் தான் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
அமைதியான போராட்டம் குறித்த நினைவூட்ட ஜாலியன்வாலாபாக் இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்திய சுதந்திர வரலாற்றில் ஏற்பட்ட கருப்பு தினத்தை இன்று வண்ண விளக்குகளால் அலங்கரித்து உயிர்நீத்த தியாகிகளின் நினைவை போற்றுவோம் என்றும் அவர் தெரிவித்தார்