பாஜக பிரதமர் வேட்பாளர் மாற்றமா? மோடிக்கு பதில் யார்?

modi
Last Modified வியாழன், 20 டிசம்பர் 2018 (11:31 IST)
வரும் 2019ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் நிறுத்தப்படும் பிரதமர் வேட்பாளர் மாற்றப்பட வாய்ப்பு இருப்பதாக பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன

கடந்த 2014ஆம் ஆண்டு வீசிய மோடி அலை தற்போது ஓய்ந்துவிட்டது என்பது சமீபத்தில் முடிந்த ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளில் இருந்து தெரிய வந்தது.

எனவே வரும் பாராளுமன்ற தேர்தலிலும் மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தால் பாஜக ஆட்சியை பிடிக்க முடியாது என்ற எண்ணம் பாஜக மூத்த தலைவர்களிடையே ஏற்பட்டுள்ளது.


எனவே வரும் 2019ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் மோடிக்கு பதிலாக பாலிவுட் நடிகரும் ரஜினியின் நெருங்கிய நண்பருமான சத்ருஹன்சின்ஹா பிரதமர் வேட்பாளராக அறிவிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. அதேபோல் உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களுக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் நிர்மலா சீதாராமன், ராஜ்நாத்சிங் ஆகியோர் பெயர்களும் பிரதமர் வேட்பாளருக்குரிய பட்டியலில் இருப்பதாக பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன


இதில் மேலும் படிக்கவும் :