வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 15 ஆகஸ்ட் 2023 (07:46 IST)

செங்கோட்டையில் பிரதமர் மோடியின் கடைசி சுதந்திர தின உரை இதுதான்: முதல்வர் ஆவேசம்..!

PM Modi
இன்று நாடு முழுவதும் சுதந்திர தின கொண்டாட்டம் நடைபெற்று வரும் நிலையில் செங்கோட்டையில் பிரதமர் ஆற்றும் கடைசி உரை இதுதான் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆவேசமாக தெரிவித்துள்ளார். 
 
இன்றைய சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் உரை நிகழ்த்த உள்ளார். இந்த உரை குறித்து  கருத்து தெரிவித்த மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி செங்கோட்டையில் பிரதமர் மோடி உரையாற்றும் கடைசி உரை இதுதான் என்றும் அடுத்த ஆண்டு இந்தியா கூட்டணி சார்பில் செங்கோட்டையில் சுதந்திர தின விழா கொண்டாடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
 
தனக்கு பிரதமராகும் ஆசை இல்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பதுதான் தனது ஒரே ஆசை என்றும் தெரிவித்தார். இந்தியா கூட்டணி நாடு முழுவதும் பாஜகவை வீழ்த்தும் என்றும் குறிப்பாக மேற்கு வங்கத்தில் பெரும் அளவு பாஜகவை விரட்டி அடிக்கும் என்றும் அவர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது மற்றும்
 
Edited by Siva